Wednesday, December 15, 2010

சில கவிதைகள்

மாறாதது..
கறும்பலகைகள் மாறி
கலர் பலகைகளாயின..
காக்கி சீருடைகள் மாறி
வேறு நிறம் பெற்றன..
மணியடிக்கும் சாதனமாக
மரத்தடியில் தொங்கிக் கொண்டிருக்கும்
தண்டவாள இரும்பு …
மின்சார மணிக்கு வழிவிட்டது.
மாறாமலிருக்கிறது.
பள்ளி இறுதி மணியடித்தவுடன்
குழந்தைகள் எழுப்பும் பேரிரைச்சல்..

சீட்டுக் கட்டு வாழ்க்கை
இணைந்திருக்க ஆசைப்பட்டோம்
நீ ஐந்தாகவும் நான் ஆறாகவும்
மாறிக் கொண்டோம்.
ஆர்ட்டின், கிளாவர், ஸ்பேட், டைமண்ட்
என குலங்கள் இருக்க..
சிக்கலே வேண்டாம் என
ஒரே குலத்தையும் தேர்ந்தெடுத்தோம்.
உணரத் தவறியது
சீட்டுக்களை பிரித்து,
பலரிடம் பகிர்ந்து..
யாராவது ஒருவர் நம்மை
இணைக்கும் வரை
காத்திருப்பதே
வாழ்க்கை என்பதை..

1 comment:

Mey said...

very nice