என்னுடைய மற்றுமொரு கவிதை முயற்சி. இதில் கவிதை இருக்கிறதா என்ற அடிப்படைக் குழப்பத்தைத் தவிர, உபயோகிக்கும் வடிவத்தில் எது கொஞ்சமாவது தேறும் என்ற மற்றோரு குழப்பமும் சேர்ந்து கொண்டது. எனவே இரு வடிவத்தில் ஒரே கவிதையை (?) வழங்கியிருக்கிறேன்.
வடிவம் 1
உள்ளிருப்போர்
வெளியே தெரியாத
"ஏசி" கார்
ஆள் இல்லாத
பின்சீட் நோக்கி
பிச்சை எடுத்தவளிடம்
காசு போடாமல்
களவாடிவிட்டேன்
இக்கவிதையை.
வடிவம் 2
உள்ளிருப்போர்வெளித்தெரியாத
"ஏசி" கார்
எப்படிச் சொல்வது
சிக்னல் பிச்சைக்காரியிடம்
பின் சீட்டில்ஆளில்லை என்பதை?
எந்த வடிவம் கொஞ்சமாவது தேறுகிறது?
3 comments:
நல்ல கவிதை!
மற்றவர்களிடம் கருத்து கேட்க்காதீர்கள்.இது எனக்கு மற்றவர்கள் சொன்னது.
சார் கவிதை நல்லாயிருக்கு.....
வா.மணிகண்டனை நான் வழிமொழிகிறேன்
ஹைக்கூ - உள்ளே வெளியே
காரின் கருப்புக் கண்ணாடியில்
தெரியும் பிம்பம், தெளிவாக காட்டியது
உள்ளேயும் பிச்சைகாரி !
- இணைய நண்பன்
Post a Comment