Thursday, August 26, 2010

அக்கறை

வெடிவிபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை
40
என்றார்கள் ஒரு சானலில்.
35
என்றது ஒரு தமிழ் செய்திதாள்.
அரசாங்கத்தின் நேற்றைய
அதிகாரப் பூர்வ அறிவிப்பான 15 ஐ
பதிவு செய்திருந்தது
உண்மையை மட்டும் விளம்பும்
ஆங்கில நாளேடு.
சிதிலங்களை டிவியில்
பார்த்த பக்கத்து வீட்டு மாமா
நூறுக்கும் மேல இருக்கும்
என கருத்தை சொன்னார்.
நடந்தது அருகில் இல்லாதவரை...
இறந்தவர்கள் தெரிந்தவர்களாயில்லாதவரை..
எண்ணிக்கையை கூட்டவோ, குறைக்கவோ
முடிகிறது சுலபமாக.

2 comments:

VELU.G said...

உண்மை தான் நண்பரே

rudras prasadams said...

very true