விளையாட்டாக அணியத் துவங்கிய
முகமூடிகளின்
நாள்பட்ட அதிகரிப்பில்
முகங்களை தொலைத்து
முகமூடிகளே முகங்களாய் அவதானித்து
சமரசம் செய்து இயங்கிக் கொண்டிருக்கும்
நாளில்..
என் பழைய முகத்தின்
அளவுகளையும், பரிமாணங்களையும்
இவ்வளவு நாட்கள் பத்திர படுத்தியுள்ள
உன் ஸ்னேகத்திற்கு கைமாறாக
காட்டுவதற்கு
எங்கே தேடுவேன்
என் முகத்தை?
முடிந்தால் நீ தரும்
அளவுகளை வைத்து
அடுத்து ஒரு முகமூடியை தயார் செய்து வைக்கிறேன்
நம்முடைய அடுத்த
சந்திப்பிற்காக..
2 comments:
ஹாய் ராஜ்குமார், நீங்கள் அழகப்பா பொறியியல் கல்லூரி மாணவரென அறிகிறேன். தொடர்புகொண்டு பேச விருப்பம்.. உங்கள் தொடர்பு விவரங்கள் அனுப்புவீர்களா?
- ம.கா.சிவஞானம்
makasis@gmail.com
ஹாய் ராஜ்குமார்.. நீங்கள் அழகப்பா பொறியியல் கல்லூரி மாணவர் என அறிகிறேன். தொடர்புகொண்டு பேச விருப்பம். தொடர்பு விவரங்கள் அனுப்புவீர்களா?
- ம.கா.சிவஞானம்
makasis@gmail.com
(founder editor of SANGAMAM)
Post a Comment