கவிதை 1
அவர் படித்தது
தினமணி பேப்பர்.
அவ்வப்போது குடித்தது
சிசர்ஸ் சிகரெட்.
அடிக்கடி அணிவது
வெளிர்நீலக் கலர் சட்டை.
அடிக்கடி சண்டையிட்டது
தவணை பாக்கிக்காக
அவரை துரத்திக்கொண்டிருந்த
கலெக்சன் ஏஜெண்டிடம்
இதுபோன்ற
சில விவரங்கள் அறிந்திருந்தேன்
இறந்து போன
கீழ் பிளாட் தாத்தாவைப் பற்றி..
அவரது பெயரை அறியாமல்..
கவிதை 2
என் பையனின் காதுகுத்திற்கு
அழைப்பு விடுத்ததுண்டு.
அப்பாவின் பாட்டி
வைகுண்டம் சேர்ந்ததுண்டு
அப்போதெல்லாம்
வாராக் கூட்டம் வந்தது
எங்களை கண்டிக்க
ஊருக்குப் போகும்போது
குழாய் மூட மறந்த போது.
Friday, August 26, 2005
Monday, August 01, 2005
நண்பர்கள் தினம்- கவிதை
உன் வானம் வேறு
உன் பகல் வேறு.
வேர்த்து வழிந்து நான்
அலுவலகம் சேரும் போது
கொட்டாவி விட்டுக் கொண்டு
சாட்டிங்கில் வருவாய் நீ.
எப்படியிருக்கிறாய்?
நன்றாகயிருக்கிறேன்.
என
சம்பிரதாயமாய் சாட்டிங்கில்
தெரிக்கும் வார்த்தைகளில்
எப்படி உணர்ந்து கொள்ளமுடியும்
நம் வலிகளை?
நான் அதிகமாய் புகைக்கும்
சிகரெட்டுக்களிருந்தும்,
உன் திடீர் மவுனத்திலிருந்தும்
நம் பிரச்சனைகளை நாமே அவதானிப்போமே..
வார்த்தைகள் அங்கே தேவையற்றுதானேயிருந்தன.
அமெரிக்காவிலிருக்கானா?கெட்டிக்காரன்
என உன்னை விசாரித்து
என்னை முட்டாளாக்குகிறார்
கணக்கு வாத்தியார்.
இன்று நம்மை பற்றி நாம் சுமக்கும்
பிம்பங்களில்
எது நிஜம்? எது பொய்?
யாருக்கு தெரியும்?
உன்னுடமிருக்கும் நட்பை
உலகிற்கு உணர்த்த
போதுமானதாயிருக்கிறது
உன் வசிப்பிடப் பெயரும்
மின்னஞ்சல் முகவரியும்.
ஆனால்
நமக்கு மட்டுமே தெரியும்
பரஸ்பரம் சொல்லிக் கொள்ள மறந்த
பிறந்தநாள் வாழ்த்துக்களும்
உன் கடந்த இந்திய விஜயத்தின் போது
நாம் பார்த்துக் கொள்ளாததும்.
என் நினைவுகளில்
எப்போதும் இருக்கிறாய்
என்றெல்லாம்
என்னால் பொய் சொல்ல முடியாது.
ஆனாலும்
ஒரு டீக்கடையின் இளையராஜா பாடல்
உன் நினைவுகளை கிளறி விடுகிறது.
என் வாடிக்கையாளனிடமிருந்து
வரும் செல்பேசி அழைப்போ
உடனடியாக
அதை சிதைத்து விடுகிறது.
எப்பொழுதாவது போகிறேன்
நீயும் நானும் சந்தித்துக் கொள்ளும்
அந்த நூலகத்திற்கு.
பழைய நாவல்களின்
சிதைந்த பக்கங்களில்
நீயும் நானும் சேர்ந்து
அடிக்கோடிட்ட சில வரிகளில்..
உணர்வேன்
உன் கைகளின் ஸ்பரிசத்தை.
இப்போதும்
யாரோ இருவர்
புத்தகத்தை வைத்து
விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுள்
யார் நீ?
யார் நான்?
இக்கவிதையை எழுதப்போவது யார்?
உன் பகல் வேறு.
வேர்த்து வழிந்து நான்
அலுவலகம் சேரும் போது
கொட்டாவி விட்டுக் கொண்டு
சாட்டிங்கில் வருவாய் நீ.
எப்படியிருக்கிறாய்?
நன்றாகயிருக்கிறேன்.
என
சம்பிரதாயமாய் சாட்டிங்கில்
தெரிக்கும் வார்த்தைகளில்
எப்படி உணர்ந்து கொள்ளமுடியும்
நம் வலிகளை?
நான் அதிகமாய் புகைக்கும்
சிகரெட்டுக்களிருந்தும்,
உன் திடீர் மவுனத்திலிருந்தும்
நம் பிரச்சனைகளை நாமே அவதானிப்போமே..
வார்த்தைகள் அங்கே தேவையற்றுதானேயிருந்தன.
அமெரிக்காவிலிருக்கானா?கெட்டிக்காரன்
என உன்னை விசாரித்து
என்னை முட்டாளாக்குகிறார்
கணக்கு வாத்தியார்.
இன்று நம்மை பற்றி நாம் சுமக்கும்
பிம்பங்களில்
எது நிஜம்? எது பொய்?
யாருக்கு தெரியும்?
உன்னுடமிருக்கும் நட்பை
உலகிற்கு உணர்த்த
போதுமானதாயிருக்கிறது
உன் வசிப்பிடப் பெயரும்
மின்னஞ்சல் முகவரியும்.
ஆனால்
நமக்கு மட்டுமே தெரியும்
பரஸ்பரம் சொல்லிக் கொள்ள மறந்த
பிறந்தநாள் வாழ்த்துக்களும்
உன் கடந்த இந்திய விஜயத்தின் போது
நாம் பார்த்துக் கொள்ளாததும்.
என் நினைவுகளில்
எப்போதும் இருக்கிறாய்
என்றெல்லாம்
என்னால் பொய் சொல்ல முடியாது.
ஆனாலும்
ஒரு டீக்கடையின் இளையராஜா பாடல்
உன் நினைவுகளை கிளறி விடுகிறது.
என் வாடிக்கையாளனிடமிருந்து
வரும் செல்பேசி அழைப்போ
உடனடியாக
அதை சிதைத்து விடுகிறது.
எப்பொழுதாவது போகிறேன்
நீயும் நானும் சந்தித்துக் கொள்ளும்
அந்த நூலகத்திற்கு.
பழைய நாவல்களின்
சிதைந்த பக்கங்களில்
நீயும் நானும் சேர்ந்து
அடிக்கோடிட்ட சில வரிகளில்..
உணர்வேன்
உன் கைகளின் ஸ்பரிசத்தை.
இப்போதும்
யாரோ இருவர்
புத்தகத்தை வைத்து
விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுள்
யார் நீ?
யார் நான்?
இக்கவிதையை எழுதப்போவது யார்?
Subscribe to:
Posts (Atom)