Saturday, July 23, 2005

கல்லூரி கால கவிதை: ஸ்நேகிதம்

ஸ்நேகிதியே...
சகோதரம் எளிது
காதலும் ... எளிது.
ஸ்நேகிதம்?

உன்னை நான்
ஸ்நேகிக்கின்றேன்.
உன் விமர்சன எடைக்கற்களால்
என்னை எடை போட்டு பார்க்கிறேன்.
என் இதயத் தூசிகளையெல்லாம்
உன் கைகளால் துடைக்கிறேன்.

வாழ்க்கை பள்ளங்களில்
வாரி விழும்போதெல்லாம்
எழுப்பி விட
உன் கைகளை எதிர்பார்க்கிறேன்
உனக்காக என் கைகளை
தயாராக வைத்திருக்கிறேன்.

நீ தென்றலாய் பேசும் போதெல்லாம்
தென்னை மரமாய் தலையசைக்கிறேன்;
புயலாய் சீறும் போதெல்லாம்
அலையாய் அலைகிறேன்.

என் பலவீனங்களை
உனக்கு உணர்த்துவதன் மூலம்
நம் ஸ்நேகத்தை பலப்படுத்துகிறேன்.

தனிமையில் நான் அழுதாலும்
என் தவிப்பின் பொருள்
நீ மட்டும் உணர வேண்டும்
கண்ணீர் துடைக்க
உன் விரல்கள் எனக்காக
நீள வேண்டும்.
. . . . . .
கடமையை எதிர்பார்க்கும்
சகோதரம்... எளிது.

காமத்தை எதிர்பார்க்கும்
காதலும்.. எளிது.

அன்பை மட்டும் நோக்கும்
உன் ஸ்நேகிதம்- வலியது
மிகவும் இனியது.

அன்புடன்
ஸ்நேகிதா

( 1989 ம் ஆண்டு எழுதிய கவிதை)

2 comments:

PKS said...

1989-la ezthinathu nu adikuripu koduthatharku nandri. illai enraal, ithu pathi vimarsanam ezuthi ungalai konjam seendi irupean :-) Jus

Thanks and regards, PK Sivakumar

Anonymous said...

Hi Rajkumar,

MALARUM NINAIVUGAL......

One of the Memebr / Editor in Our SANGAMAM ....

Palanisamy