Wednesday, May 10, 2006

தேர்தல் முடிவு- சில மிகை வினைகள்

இன்னும் முடிவுகள் வரவில்லை. அதற்குள் வலைப்பதிவு உலகத்திலும் , பத்திரிக்கை உலகத்திலும் முடிவு வந்துவிட்டது போல நடந்து கொள்கிறார்கள். நான் பார்த்த சில மிகைவினைகள் சில.

  1. பதவி ஏற்பு விழாவிற்கு அம்மா சென்னன பல்கலைக்கழக அரங்கை ரிசர்வ் செய்திருப்பதாக கூறப்படுவது.
  2. குமுதம் ரிப்போர்டரில் வந்திருக்கும் 'கலைஞர் அமைச்சரவை லிஸ்ட் ரெடி" நியூஸ்
  3. ஜோசப்சார் வலைப்பதிவில் எழுதியிருக்கும் கலைஞருக்கு ஓர் கடிதம்.(ந்ன்றாக எழுதியிருக்கிறீர்கள் சார்)
  4. தமிழக அரசின் இணையதளத்தில் (tn.gov.in) அம்மாவின் படத்தை நீக்கியதோடு அல்லாமல், இணையதள நிறத்தையும் மாற்றி விட்டார்கள் ( பச்சையிலிருந்து வெளிர்நீலம்)

இணையதள நிறமாற்றம் ஆட்சிமாற்றம் ஏற்படுவதை சொல்லாமல் சொல்கிறதோ?

நாளை நடப்பதை யாரோ அறிந்திருக்கிறார்களோ?

3 comments:

தருமி said...

நாளைக்கு 'பச்சை' வென்று மீண்டும் வந்தால், அந்த தமிழக அரசின் இணையதளத்தில் வண்ணம் மாற்றியவர் என்ன ஆவார் என்பதைப்பற்றி யோசிச்சேன். சிரிப்பா வருது; பாவம் அந்த மனுஷன்...
அந்த மனுஷன் அப்படியெல்லாம் மாட்டிக்க மாட்டார்..நீலமாவோ, மஞ்சளாவோ மாறட்டும்.

Mookku Sundar said...

//தமிழக அரசின் இணையதளத்தில் (tn.gov.in) அம்மாவின் படத்தை நீக்கியதோடு அல்லாமல், இணையதள நிறத்தையும் மாற்றி விட்டார்கள் ( பச்சையிலிருந்து வெளிர்நீலம்) //

மஞ்சள் கலர் அல்லவா மாற்றி இருக்க வேண்டும். ;-)

Muthu said...

ராஜ்குமார்,
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.