Thursday, June 23, 2005

சில கவிதைகள்

கடைசி வரிகள்

ஒன்றரை வருடங்களுக்கு
முன்
நீ எழுதிய
கடைசிக் கடிதத்தின்
கடைசி வரிகள்..
"இனிமேல் இத்தகைய
இடைவெளி இருக்காது
அடிக்கடி கடிதம் எழுதுவேன்."

காலி

கூட்ட மிகுதியிலும்
காலியாயிருந்தது
அரவாணியின்
பக்கத்து சீட்.

புறக்கணிப்பு

அழுக்குச் சட்டைக்காரனை
புறக்கணித்து
அடுத்தச்சீட்டில்
அமர்ந்தேன்.
என்னை தாண்டி
முன்சீட்டில் அமர்ந்தவன்
எந்தக் குறையை
கண்டான் என்னிடம்?

2 comments:

பிச்சைப்பாத்திரம் said...

mmmm........ not bad rajkumar.

ஆனால் இவ்வாறு தெளிவாக புரியும்படி எழுதுவது நல்ல கவிதையில் சேர்த்தியில்லையோ? :-)))

Kannan said...

இரண்டாவது (காலி) எனக்குப் பிடித்தது, யோசிக்க வைத்தது. இதற்கே புறக்கணிப்பு என்ற தலைப்பு பொருத்தமாயிருக்கும் என்று நினைக்கிறேன்.