Wednesday, April 28, 2004

தேர்தல் விதிமுறை மாற்றங்களும் அதன் தாக்கங்களும்
யார் ஜெயிப்பார்கள்? என்ற கேள்விக்கு நான் விடை தேடப்போவதில்லை.

பல்வேறு டிவி சானல்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் மக்கள் குழம்பினார்களோ என்னவோ , அரசியல் கட்சிகள் ஆடிப்போய் உள்ளன.கருத்துக் கணிப்பினை வைத்து அரசியல் ஆலோசனை கூட்டம் அவசரமாக நடைபெற்றது ( பிஜேபி மற்றும் காங்கிரசு) இதுவே முதல் முறை.

சீர்திருத்த மாற்றங்களை நடைமுறை படுத்துவதாக எண்ணிக் கொண்டு, அனைத்து வேட்பாளர்களையும் சொத்துக் கணக்கு தாக்கல் செய்யச் சொன்னது தேர்தல் ஆணையம். இதன் காரணம் என்ன என்பது தெரியவில்லை.

விவரங்களை நோக்கும் போது சொத்துக் கணக்கை எப்படி குறைத்துக் காண்பிப்பது என்பதில் அனைவரும் கவனம் செலுத்தியுள்ளார்கள்.

பெரும்பான்மையான வேட்பாளர்களுக்கு சொந்தமாக கார் இல்லையாம்.சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவருக்கும் சொந்த கார் இல்லை. சரத்பவாரை காட்டிலும் சரத்பவாரின் மனைவி செல்வந்தர்.

28 கோடி அபராதம் செலுத்த வேண்டிய தின்கரனுக்கு, சொத்து மதிப்பே 4 கோடிதான்.பி. சிதம்பரத்துக்கு 12 கோடி ரூபாய் சொத்து இருக்கிறதாம்.

எல்லாம் உண்மையில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த தகவல்களை வைத்து தேர்தல் ஆணையம் என்ன செய்ய போகிறது?மக்களுக்கு என்ன பயன்? தெளிவில்லை.


தேர்தல் விதிமுறை மாற்றங்களால் நலிவடைந்த சில தொழில்களை இங்கே குறிப்பிட விரும்பிகிறேன்.

போஸ்டர் அடிக்க/ஒட்ட கட்டுப்பாடு என்பதால் சிவகாசியில் உள்ள அச்சகங்கள் வியாபரம் இல்லாமல் போய் விட்டடன.இதன் மதிப்பு பல கோடி இருக்கலாம்.

சுவர் ஓவியர்களின் வியாபரம் கொஞ்சம் படுத்து விட்டது.

ஓடி வருகிறான் உதய சூரியன் என அலறும் கூம்பு வடிவ ஒலிப் பெருக்கிகளை தடை செய்து விட்டார்கள்.

சின்னங்களை நினைவு படுத்தும் வகையில் தரப்படும் பம்பரம், குடை ஆகிய பொருட்கள் த்ற்பொழுது தரப்படுவதில்லை. ( முன்பு காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் (1984 ம் வருட தேர்தல்)போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தனது சிங்கம் சின்னத்தை பிரபலப்படுத்த கூண்டில் சிங்கத்துடன் வலையம் வந்து கொண்டிருந்தார்).

அரசு அதிகாரிகளில் பெரும்பான்மையோர் தேர்தல் பணிக்காக வெளி மாநிலங்களுக்கு சென்று விட்டார்கள். அரசு இயந்திரமும், வளர்ச்சிப் பணிகளும் ஸ்தம்பித்துப் போய் உள்ளது.

என்னதான் விதிமுறை மாற்ற்ங்கள் செய்தாலும்,ஓட்டளிக்கும் ஆர்வம் குறைந்து வருவதை தடை செய்ய இயலவில்லை. படித்த மேதாவிகள் பல பேருக்கு ஓட்டளிக்கும் நாள்- கூடுதல் விடுமுறை தினம் ( நான் உட்பட. என் பெயர் லிஸ்டில் இல்லை).

ஓட்டுச்சாவடிகள் கைப்பற்றப்படுவதை டிவியில் பார்த்து விட்டு, வீட்டில் இருப்பதே உசிதம்.

எலக்ட்ரானிக் வோட்டிங் என்பதால் முடிவுகளை டிவியில் பார்ப்பது சுவாரஸ்யமற்று போய் விட்டது.3 மணி நேரத்தில் முடிவுகள் தெரிந்து விடுகிறது.

பல கோடி ரூபாய் செலவழித்து தேர்தல் நடத்தப்பட, 50 சதவீத மக்களே ஓட்டளிப்பார்கள் ( கள்ள ஓட்டு உட்பட) என்பது வேதனைக்குரிய விசயம்.

யார் ஜெயித்தாலும் ஜெயிக்கட்டும்.தொங்கு பாரளுமன்ற்ம் அமைந்து மீண்டும் தேர்தல் வந்து விடாமல் இருக்க, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.No comments: