Tuesday, February 08, 2005

கிடைக்காதது..

கிடைக்காத பேக்கரி கேக்குகள்
பேக்கரி வைக்கவும்..

கிடைக்காத பேட்டரி பொம்மைகள்
பேன்ஸி ஸ்டோர் வைக்கவும்..

கிடைக்காத ஸ்போர்ட்ஸ்டார்
புத்தகக்கடை வைக்கவும்..

ஆசைகளை தூண்டின
அக்காலத்தில்.

இவையெல்லாம் வைக்காமல்
வேறு வானத்தில் பறக்கிறது
என் பட்டம்.

வாயில் வைத்தால் பிரச்சனை வராத பொம்மைகள்,
எக்ஸ்பரி டேட் பார்த்து வாங்கிய சாக்லேட்டுக்கள்,
வளுவளு தாள் புத்தகங்கள் என
கவனத்துடன் வாங்குகிறேன் பண்டங்களை..
என் பிள்ளைக்கு

ஓங்கி வளர்கிறது
ஏக்கங்கள் அவன் மனதில்
பிளார்ட்பார்ம் கடை பொம்மைகளுக்கும்,
பெட்டிக்கடை கடலை உருண்டைகளுக்கும்.

No comments: